Pages

Thursday, May 19, 2011

மாநில தேர்தலும் தமிழக முஸ்லிம்களும் - வெளிச்சத்தை நோக்கி...

தமிழ் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழர்கள் இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்த நிலையில் மீண்டுமொருமுறை 5 வருடங்களிற்கு மாநில அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல சமிக்ஞையை காட்டுவதாக அமைகிறது.



அதே வேளை இந்துத்துவ உறவை அதிகம் கொண்டவரும் பாரதிய ஜனதாவுடன் நிழல் தொடர்புகளை பேணி வருபவருமான ஜெயலலிதா தனது பதிவியேற்பிற்கு குஜாராத்தின் கொலை வெறியன் நரேந்திர மோடியை அழைத்தமை ஆரம்பமே சரியில்லையோ என எண்ண வைக்கிறது.

தமிழக மக்களால் வீசியெறியப்பட்ட இந்துத்துவ இனவாத அமைப்பினரிற்கு அம்மையாருடன் உறவாடி மீண்டும் ஒரு கோவையை உருவாக்கி அதன் மூலம் அரசியலரங்கில் தலைகாட்ட வாய்புக்களை வழங்கினாலும் வியப்பேதுமில்லை.

தமீம் அன்சாரியின் தோல்வி உண்மையிலேயே தமிழக முஸ்லிம்களை பொருத்தவரை இழப்பென்றே சொல்லலாம். எமக்கு தேவை ஆயிரம் நரிகளின் ஊளையல்ல. ஒரு சிங்கத்தின் கர்ஜனையே. அந்த வாய்ப்பு சொற்ப வாக்கு வித்தியாசத்தில் இல்லாமல் போய்விட்டது கவலைக்குரிய விடயமாகும்.

அவரின் தோல்விக்கு அவர் ஏறிய வாகனமும் ஒரு காரணம். முன்னால் உள்ள எதிரியை விட பின்னால் உள்ள துரோகிகளே பயங்கரமானவர்கள். வருங்கால தேர்தலில் அவர் சுயேட்சையாக நின்றால் இன்சாஅல்லாஹ் நிறைய சாதிக்கலாம்.



ஒரு தமீம் அன்சாரியாலும் ஒட்டுமொத்த தமிழக முஸ்லிம்களின் தலையெழுத்தை மாற்ற முடியாது. இன்னும் 5 வருடங்கள் பாக்கியிருக்கின்றன. தமீம் அன்சாரி போல் துடிப்புள்ள தெளிவுள்ள சிறந்த இளைய தலைமுறையின் வருகை தமிழக முஸ்லிம் அரசியலில் இன்றியமையாத தேவையாக உள்ளது.






இந்திரா காங்கிரஸ் போல அகில இந்திய முஸ்லிம்களிற்கான அரசியல் கட்சியின் தேவையும் இங்கே உணரப்பட வேண்டிய இன்னொரு விடயமாகும். இந்திய அரசியலில் முஸ்லிம் அரசியல் என்பது வெறுமனே சலுகைக்கான அரசியலாக அல்லாமல் உரிமைக்கான அரசியலாக பரிணாமம் பெறுவது காலத்தின் கட்டாயம்.

முஸ்லிம் அரசியலை உருவாக்குவது என்பது முஸ்லிம் அரசியல் கட்சிகளை உருவாக்குவதால் சாத்தியப்பட போவதில்லை. நாம் இனத்தால் திராவிடர்கள் மொழியால் தமிழர்கள் எனும் முட்டாள்தனமான காலம் காலமாக எம்மை கட்டிப்போட்டுள்ள சிந்தனை கயிறுகள் அறுத்து எறியப்படல் அவசியம்.


நாம் எல்லாவற்றாலும் முஸ்லிம்கள் எனும் தனித்துவ அரசியல் சித்தாந்தத்தை நோக்கி தமிழக முஸ்லிம்ளிற்கான அரசியல் விழிப்புணற்ச்சி ஏற்படுத்தப்படல் வேண்டும். இதை பாமர முஸ்லிமும் புரியும் விதத்தில் அவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதிலேயே தமிழக முஸ்லிம்களின் வெற்றியின் உதயம் தங்கியுள்ளது.

கடைசியாக ஒன்று சொல்லி முடிக்கின்றேன் "சிங்கத்தின் வாலாய் இருப்பதைவிட கட்டெறும்பின் தலையாய்யிருப்பதே மேல்"

No comments:

Post a Comment