Pages

Thursday, May 19, 2011

மாநில தேர்தலும் தமிழக முஸ்லிம்களும் - வெளிச்சத்தை நோக்கி...

தமிழ் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழர்கள் இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்த நிலையில் மீண்டுமொருமுறை 5 வருடங்களிற்கு மாநில அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல சமிக்ஞையை காட்டுவதாக அமைகிறது.

கைபர் தளம்: இராணுவமயமாக்கலும் இலங்கை முஸ்லிம்களும்

கைபர் தளம்: இராணுவமயமாக்கலும் இலங்கை முஸ்லிம்களும்: "கைபர்தளம்: 19/05/11 நே ற்றைய செய்தியில் இலங்கையின் உயர் கல்விக்கு பொருப்பான அமைச்சர் ஒரு விடயத்தை அறிவித்தார். 'பல்கலைக்கழகம் புகும் மா..."

விக்கிலீக்ஸ் வெளியிடும் அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள!



vilees-13-05-11
உலக அளவில் தொடர்ந்து மர்ம முடிச்சுகளை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் பற்றிய உடனடி தகவல்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது. உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர். இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிலீக்ஸ் செய்திகள் என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தியின் பற்றிய வல்லுனர்களின் கருத்துக்கள் எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கிலீக்ஸ் செய்திகளை கொடுக்கிறது. அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

சீனாவின் இராணுவ ஆதரவு பாகிஸ்தானிற்கு எப்போதும் உள்ளது. - சீனா தடால் அறிவிப்பு

அண்மையில் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுக்குழுவினர் பாகிஸ்தானிய அரசிற்கும் அதன் மக்களிற்கும் சீனாவின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதுமே இருக்கும் என உறுதி மொழி அழித்துள்ளனர்.

மேற்படி குழுவில் அங்கம் வகித்த சீன உயர் நிலை இராணுவ ஜெனரல்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்று அதிகார குழுவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துடையாடியதுடன் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாதிட்டுள்ளனர்.

Wednesday, May 18, 2011

பாகிஸ்தானிய இராணுவம் எதை நோக்கி நகர்கிறது?

பாகிஸ்தானுடனான அமெரிக்காவின் முறுகல் நிலை மேலும் மேலும் வலுவடைந்து செல்கிறது. ஒரு பக்கம் அமெரிக்கா தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை விடாமல் பாகிஸ்தானின் மேல் ஏவுகிறது. தலிபான் பயங்கரவாதிகளின் பதுங்குமிடங்கள் அழிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை அதற்கு விளக்கமும் அழிக்கிறது. ஆனால் உண்மையில் அங்கு கொல்லப்படுவது அப்பாவி பொது மக்களே.

இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!

இவ்வருடம் முதல் பல்கலைக்கழக மாணவர்களுக்கு றிப்பிட்ட 
காலத்திற்கு இராணுவத்தில் பயிற்சி வழங்க அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது.

பயிற்சியில் கலந்து கொள்ளாதோர் பல்கலைக்கழக அனுமதியைப் பெற மாட்டார்கள் என்று உயர் கல்வி அமைச்சர் எச்சரித்திருப்பதாகவும் செய்தி வெளிவந்திருக்கிறது.

Tuesday, May 17, 2011

சரத் பொன்சேக்காவுடன் அரசாங்கம் சமரசத்திற்கு தயாராகிறதா..?


சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளைக்கொடி வழக்கை கைவிடுவது பற்றி சிறிலங்கா அரசதரப்பு இரகசியமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை அலரி மாளிகைக்கு அழைத்து இதுபற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார். அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்சவுடனும் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.