அண்மையில் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுக்குழுவினர் பாகிஸ்தானிய அரசிற்கும் அதன் மக்களிற்கும் சீனாவின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதுமே இருக்கும் என உறுதி மொழி அழித்துள்ளனர்.
மேற்படி குழுவில் அங்கம் வகித்த சீன உயர் நிலை இராணுவ ஜெனரல்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்று அதிகார குழுவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துடையாடியதுடன் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாதிட்டுள்ளனர்.
பாகிஸ்தானிய வான்படையை நவீன மயப்படுத்தல். பாகிஸ்தானிற்கு சீனாவின் அதி நவீன சண்டை விமானங்களை கட்டம் கட்டமாக வழங்குதல். பரஸ்பர உளவு சேவைகளை விஸ்தரித்தல் என பல விடயங்கள் இதில் அடங்கியுள்ளன.
இது தொடர்பாக பாகிஸ்தானிய டவுன் செய்தி இதழின் நிருபர் சீன உயர் ஸ்தானிகரை பேட்டி கண்ட போது மேற்படி வானொலிச் செய்தி சீன ஜனாதிபதியின் அனுமதியுடனேயே வெளியிடப்பட்டுள்ளது என உறுதிப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment