Pages

Tuesday, May 17, 2011

ஒசாமாவின் மனைவி அமெரிக்காவிற்கு தகவல்களை தரலாம்: ஒமரின் நண்பர்!



osama-osama-13-05-11
ஆசிரியையாக பணியாற்றியவரும், நன்கு படித்தவருமான ஒசாமா மனைவியிடம் இருந்து அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சில தகவல்களைப் பெறலாம் என பின்லேடன் மகனின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை வரலாற்றை எழுத அவரின் மகன் ஒமருக்கு உதவியாக இருந்தவர் ஜீன் சாசன். ஒமரின் நெருங்கிய நண்பர் இவர். ஒசாமாவின் மனைவியர் குறித்து அவர் கூறியதாவது: ஒசாமா பின்லேடனின் மனைவியர் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவர்கள். ஒசாமாவின் சதித் திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. தப்பித்தவறி ஒசாமாவிடம் அவர்கள் எதுவும் கேட்டாலும் அவர் சொல்லமாட்டார்.


அவர்களுடன் எதைப் பற்றியும் விவாதிக்க மாட்டார். ஒசாமாவை பார்க்க வரும் யாரையும் அவரின் மனைவியர் பார்க்கவோ அல்லது சந்திக்கவோ அனுமதி கிடையாது. யாராவது ஒருவர் ஒசாமாவின் மனைவியரை பார்க்க வேண்டும் என அவர்கள் வீட்டிற்கு வந்தாலும் அவரை யாரும் சந்திக்கவும் மாட்டார்கள். ஒசாமா கொல்லப்பட்டது முதல் அவரின் மனைவியர் எல்லாம் பாகிஸ்தான் நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர். வேண்டுமானால் அவர்கள் ஒரு சில தகவல்களை மட்டுமே தெரிவித்திருக்க முடியும். ஒசாமா பின்லேடன் மனைவியரில் ஒருவர் நன்கு படித்தவர். ஆசிரியராக பணியாற்றியவர். அதனால் அவர் மட்டும் வேண்டுமானால் அமெரிக்க விசாரணை அதிகாரிகளிடம் சில தகவல்களைத் தெரிவிக்க வாய்ப்பு உண்டு.

ஒசாமாவின் மற்றொரு மனைவி ஏமன் நாட்டைச் சேர்ந்தவர். அவர் படிக்காதவர். கணவனே கண்கண்ட தெய்வம் என வாழ்ந்தவர். அதனால் அவரிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகள் தகவல்களைப் பெறுவது மிகவும் கடினமே. ஒசாமா இறந்து விட்டதற்கான ஆதாரங்களைத் தரும்படி அவரின் உறவினர்கள் கேட்கின்றனர். அவர் எப்படி கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளனர். ஒசாமா விவகாரத்தில் என்ன நிகழ்ந்தது, அவர் கொல்லப்பட்ட பின் தங்களை அழைக்காதது ஏன் என்பது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் ஒசாமாவின் உடலை பார்க்கவும், இறந்தது அவர்தானா என்பதை உறுதி செய்யவும் விரும்பினர். ஆனால் அதுவெல்லாம் நடக்கவில்லை. ஒசாமா இறந்து விட்டதற்கான ஆதாரங்களை அவரின் குடும்பத்தினரிடம் காண்பித்தால் உறவினர்கள் உட்பட பலரும் அவர் இறந்து விட்டார் என்பதை நம்புவர். "தனது தந்தைக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்படும். சதாம் உசேன் போல தன் தந்தைக்கு எதிராகவும் வழக்கு விசாரணை நடக்கும்" என ஒசாமாவின் மகன் ஒமர் நம்பினார். ஒசாமா செல்லும் பாதை சரியில்லை, அப்பாவிகளை கொல்ல வேண்டாம் என அவரிடம் பல முறை வாக்குவாதம் செய்தவர் ஒமர்.

No comments:

Post a Comment