தமிழ் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளில் தமிழக மக்கள் குறிப்பாக தமிழர்கள் இந்து இனவாதத்தை அடியோடு நிராகரிக்கும் மனப்பாங்கை துல்லியமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி இதற்கு சிறந்த சான்று. அதன் முன்னிலை தலைவர்கள் டிபோசிட்டை இழந்த நிலையில் மீண்டுமொருமுறை 5 வருடங்களிற்கு மாநில அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். இது ஒரு நல்ல சமிக்ஞையை காட்டுவதாக அமைகிறது.
Thursday, May 19, 2011
மாநில தேர்தலும் தமிழக முஸ்லிம்களும் - வெளிச்சத்தை நோக்கி...
கைபர் தளம்: இராணுவமயமாக்கலும் இலங்கை முஸ்லிம்களும்
கைபர் தளம்: இராணுவமயமாக்கலும் இலங்கை முஸ்லிம்களும்: "கைபர்தளம்: 19/05/11 நே ற்றைய செய்தியில் இலங்கையின் உயர் கல்விக்கு பொருப்பான அமைச்சர் ஒரு விடயத்தை அறிவித்தார். 'பல்கலைக்கழகம் புகும் மா..."
விக்கிலீக்ஸ் வெளியிடும் அனைத்து தகவல்களையும் உடனே அறிந்து கொள்ள!

உலக அளவில் தொடர்ந்து மர்ம முடிச்சுகளை வெளிஉலகத்திற்கு கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விக்கிலீக்ஸ் பற்றிய உடனடி தகவல்களை நாம் தெரிந்து கொள்ள ஒரு தளம் உள்ளது. உலகில் இணையதளம் பயன்படுத்தும் அனைவரையுமே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்த பெருமை விக்கிலீக்ஸ் தளத்திற்கு உண்டு. யாருக்கும் பயப்படாமல் உண்மைய உலகுக்கு ஆதாரத்துடன் நிரூபித்த விக்கிலீக்ஸ் செய்திகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனைவரும் நொடியில் அறிந்து கொள்ள ஒரு தளம் உதவுகிறது.
Wikiriver (விக்கி நதி)என்பது தான் இத்தளத்தின் பெயர். இத்தளத்திற்கு சென்று நாம் தற்போது வெளிவந்துள்ள விக்கிலீக்ஸ் செய்திகள் என்னென்ன எத்தனை தளங்களில் இதற்கு தொடர்பான செய்தி வந்துள்ளது. இப்படி வெளிவந்திருக்கும் செய்தியின் பற்றிய வல்லுனர்களின் கருத்துக்கள் எந்தெந்த தளங்களில் எல்லாம் வந்திருக்கிறது என்பதை நமக்கு நொடியில் அளிப்பதற்காக இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
நீரோடையாக ஒரே பக்கத்தில் முன்னனி விக்கிலீக்ஸ் செய்திகளை கொடுக்கிறது. அங்கு கொடுத்திருக்கும் இணைப்பை சொடுக்கி ஒவ்வொரு செய்திகள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
சீனாவின் இராணுவ ஆதரவு பாகிஸ்தானிற்கு எப்போதும் உள்ளது. - சீனா தடால் அறிவிப்பு
அண்மையில் பாகிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்ட சீன தூதுக்குழுவினர் பாகிஸ்தானிய அரசிற்கும் அதன் மக்களிற்கும் சீனாவின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் எப்போதுமே இருக்கும் என உறுதி மொழி அழித்துள்ளனர்.
மேற்படி குழுவில் அங்கம் வகித்த சீன உயர் நிலை இராணுவ ஜெனரல்களும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நிறைவேற்று அதிகார குழுவைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் பாகிஸ்தானிய பிரதமர் மற்றும் இராணுவ தளபதி ஆகியோரை சந்தித்து கலந்துடையாடியதுடன் பல ஒப்பந்தங்களிலும் கைச்சாதிட்டுள்ளனர்.
Wednesday, May 18, 2011
பாகிஸ்தானிய இராணுவம் எதை நோக்கி நகர்கிறது?
இலங்கை பல்கலைக்கழக மாணவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி ! இடி விழுந்த நிலையில் இஸ்லாமிய சமூகம்!
Tuesday, May 17, 2011
சரத் பொன்சேக்காவுடன் அரசாங்கம் சமரசத்திற்கு தயாராகிறதா..?
சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெள்ளைக்கொடி வழக்கை கைவிடுவது பற்றி சிறிலங்கா அரசதரப்பு இரகசியமான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சி அரசியல்வாதி ஒருவரை அலரி மாளிகைக்கு அழைத்து இதுபற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பேச்சு நடத்தியுள்ளார். அதன்பின்னர் கோத்தாபய ராஜபக்சவுடனும் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது.
ஹமாஸ் - ஸியோனிஸ பொறி வலையில்......
அட என்ன ஒப்பந்தம் அது என ஆய்வு செய்த போது தான் மீண்டும் இரத்தம் தோய்ந்த இஸ்லாமிய வரலாற்றின் எச்சங்கள் தான் இவர்கள் எனும் உண்மை மீண்டும் மண்டையில் விண் என்று உறைத்தது.
கடாபியும், புதல்வர்களும் கைதாவார்களா..??
கடாபி மற்றும் அவரது மகன்களைக் கைது செய்ய சர்வதேச கிரிமினல் கோர்ட் (ஐ.சி.சி.,)தயாராகிவிட்ட நிலையில், லிபிய அரசு திடீரென உடனடிப் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
லிபியாவில் அதன் தலைவர் கடாபிக்கு எதிரான மக்கள் போராட்டம், நான்காம் மாதமாகத் தொடர்கிறது.கடாபித் தரப்பு ராணுவத்தின் போர்க் குற்றங்கள் பற்றிய ஆதாரங்கள் ஏற்கனவே சர்வதேச கிரிமினல் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.
பாகிஸ்தான் மீது நேட்டோ அத்துமீறி தாக்குதல், பாகிஸ்தானும் பதில் தாக்குதல்
பாகிஸ்தான் ராணுவ செக்போஸ்ட் மீது நேட்டோ படையினர் அத்துமீறி நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். பாக்., வீரர்கள் மிஷின்கன் மூலம் எதிர்தாக்குதல் நடத்தியதில் எவ்வித சேதமும் இல்லாமல் தப்பியது.பாக்., வீரர்கள் 2 பேர் மட்டுமே காயமுற்றனர். இது குறித்து நேட்டோ படையினர் எவ்வித கருத்தும் தெரிவிக்க மறுத்து விட்டது.
ஒசாமாவின் மனைவி அமெரிக்காவிற்கு தகவல்களை தரலாம்: ஒமரின் நண்பர்!

ஆசிரியையாக பணியாற்றியவரும், நன்கு படித்தவருமான ஒசாமா மனைவியிடம் இருந்து அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சில தகவல்களைப் பெறலாம் என பின்லேடன் மகனின் நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார். ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை வரலாற்றை எழுத அவரின் மகன் ஒமருக்கு உதவியாக இருந்தவர் ஜீன் சாசன். ஒமரின் நெருங்கிய நண்பர் இவர். ஒசாமாவின் மனைவியர் குறித்து அவர் கூறியதாவது: ஒசாமா பின்லேடனின் மனைவியர் எல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வாழ்ந்தவர்கள். ஒசாமாவின் சதித் திட்டம் மற்றும் செயல்பாடுகள் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. தப்பித்தவறி ஒசாமாவிடம் அவர்கள் எதுவும் கேட்டாலும் அவர் சொல்லமாட்டார்.
தூதரக அதிகாரி சுட்டுக் கொலை: தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பு!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சவுதி அரேபிய தூதரகத்தின் வெளிப்புறத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அத்தூதரக அதிகாரி ஒருவர் பலியானார்.
இச்சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். அதன்படி முதலில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாயினர். தொடர்ந்து கராச்சியில் உள்ள சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் யாரும் பலியாகவில்லை.
இச்சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். அதன்படி முதலில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாயினர். தொடர்ந்து கராச்சியில் உள்ள சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் யாரும் பலியாகவில்லை.
Subscribe to:
Posts (Atom)




