அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவம் இஸ்லாமாபாத் தாக்குதலின் பின் தன்னிச்சையாக ஆப்கான் மற்றும் பாகிஸ்தானிய வட மேற்கு மாகாணங்கள் மீதான தாக்குதல் வலுவை சடுதியாக அதிகரித்துள்ளது.
அபோதாபாத் தாக்குதலிற்கு பின்பு நேற்று வரை அமெரிக்கா 9 தடவை பாகிஸ்தானில் அதன் அத்துமீறிய ஏவுகணை மற்றும் விமானத் தாக்குதலை நடாத்தியுள்ளது.
இப்போது ஆப்கானை ஆக்கிரமித்துள்ள அமெரிக்க மற்றும் நேட்டோ படையினர் வெள்ளை பொஸ்பரஸ் (white phosphorus bombs) கைக்குண்டுகளையும் எறிகணைகளையும் அப்பாவி மக்கள் செறிந்து வாழும் பகுதிகள் மீத தாராளமாக பயன்படுத்துகிறார்கள்.
![]() |
| பொஸ்பரஸ் குண்டுவீச்சிற்கு இரையான அப்பாவி குழந்தைகள் |
அந்நிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரும் ஆகாயபடையினரும் பாவித்த இரசாயன ஆயுதங்கள் தொடர்பாக ஆப்கானிய இராணுவ தலைமைப்பீடத்திடம் ஏராளமான ஆதாரபூர்வமான தகவல்கள் இருக்கின்றன.
இது தொடர்பான விபரங்களை பீஸ் டீவி அண்மையில் வெளியிட்டுள்ளது. இந்த பொஸ்பரஸ் குண்டின் சிறப்பம்சம் என்னவென்றால் தாக்குதலிற்கு உள்ளான உடல் பாகத்தில் ஒட்டிக்கொண்டு இறுதி ஒக்ஸிசன் முடியும் வரை ஆழமாக ஊடுருவி எரியும். இதனால் மிகக் கடுமையான தீக்காயங்கள் உடல் உள்ளுறுப்புக்கள் வரை விரவி சேதங்களை ஏற்படுத்துவதுடன் தசை அழற்ச்சியையும் உண்டாக்கும்.
உலகலாவிய ரீதியில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்கள் இவை. இதன் பயன்பாட்டை பல நாடுகளும் கடுமையாக கண்டிக்கின்றன. ஆனால் ஆப்கானிய யுத்தத்தில் எங்கெல்லாம் ஒல்லாந்து படைகள் களம் புகுந்தனவோ அங்கெல்லாம் இதை பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.
உலகில் ஒரு புரம் முஸ்லிம் நாடுகளின் கட்டமைக்கப்பட்ட இராணுவங்கள் தந்திரமாக புரட்சியின் பெயரில் பலமிழக்க வைக்கப்படுகின்றன. மறுபுரம் முஸ்லிம்கள் மீத இரசாயன தாக்குதல்கள் அதிகரித்தவண்ணம் உள்ளன.

No comments:
Post a Comment