பாகிஸ்தான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணியை மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துள்ளது. இதற்காக நான்காவது அணு உலையை அமைத்து வருவதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள் எடுத்த புகைப்படங்களை "நியூஸ்வீக்" இதழ் வெளியிட்டுள்ளது. இஸ்லாமாபாத்திலிருந்து 140 கி.மீ தொலைவில் அமைந்துள்ள குஷாப் அணு மின் நிலையத்தில் நான்காவது அணு உலை கட்டுமானப் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த அணு உலை 2013ல் உற்பத்தியைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் நான்காவது அணு உலையை அந்நாடு தன்னகத்தே கொண்டிருக்கும். இதன் மூலம் புளூட்டோனியம் உற்பத்தியை அதிகரித்துக் கொள்ளவும், அதைக் கொண்டு அணு ஆயுதத் திட்டத்தை அதிகரிக்கவும் அந்நாடு திட்டமிட்டுள்ளதாக அந்த இதழுக்கு பேட்டியளித்த நிபுணர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான விரிசல் அதிகரித்துள்ள நிலையில் புளூட்டோனியம் தயாரிப்பை அதிகரிக்கும் பாகிஸ்தானின் திட்டம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை கருத்து எதையும் வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இது குறித்து கூறியதாவது: பாகிஸ்தான் ஏற்கெனவே 100க்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து வைத்துள்ளது. ஆண்டுக்கு 8 முதல் 20 குண்டுகள் வரை அந்நாடு தயாரித்து வைத்துள்ளது. எனவே அந்நாடு அணுகுண்டுகளை அதிகரித்துக் கொள்வது என்ற முடிவு இப்போது எடுத்ததல்ல. பல ஆண்டுகாலமாக அணுகுண்டுகளை அந்நாடு தொடர்ந்து தயாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானிடம் உள்ள அணுகுண்டுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் இதைப்பற்றி அந்நாடோ, அமெரிக்காவோ எவ்வித கவலையும் வெளியிடவில்லை என்று சர்வதேச அறிவியல் மற்றும் பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த பால் பிரானன் தெரிவித்தார். பாகிஸ்தானைப் பொருத்தமட்டில் இந்த விடயத்தில் ஒரு குழப்பமான சூழலே நிலவுகிறது. இந்தியாவிலிருந்து அச்சுறுத்தல் என்று கூறி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5,000 கோடி டொலர்களை செலவிட பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. இந்த விவகாரம் வெறுமனே இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரம் என்று அமெரிக்க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம்நுன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவும், ரஷியாவும் தங்களிடையிலான பனிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து கடந்த காலங்களில் அணு ஆயுதங்களால் ஏற்படும் பேரழிவை உணர்ந்துள்ளன. இதைப்போல இந்தியா, பாகிஸ்தான் இடையே இப்போது மிகவும் பயங்கரமான காலகட்டம் நிலவுகிறது. அதிலிருந்து இரண்டும் கற்று உணர வேண்டும். அதற்காக அனைவரும் பாதிக்கப்படுவது ஏற்க முடியாதது என்று சாம்நுன் தெரிவித்தார். இப்போது உலகம் முழுவதுமான பார்வை மாறியுள்ளது. இந்த புவியைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அந்த வகையில் அணு ஆயுதங்கள் மிகவும் ஆபத்தானவை என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அணுகுண்டுக்கான மூலப்பொருள் அல்லது அணுகுண்டுகளை தயாரித்து வைப்பது என்பது மிகவும் ஆபத்தான விடயம். மேலும் யுரேனிய சுரங்கம் அந்நாட்டில் உள்ளது. அதை செறிவூட்டும் நுட்பத்தை அந்நாட்டு விஞ்ஞானி ஏ.கியூ. கான் அளித்துள்ளார்.
ஜிகாதி குழுக்கள், லஷ்கர்-இ-தொய்பா குழுக்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் அடைக்கலம் அளித்திருப்பது கவலையை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுத வளர்ச்சி எவ்விதம் இருக்கும் என்பதை ஆய்வு செய்து பார்த்த போது அது கவலையளிப்பதாகவும், மிகப்பெரிய அழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதையும் கணிக்க முடிவதாக சர்வதேச அளவில் உத்திகள் வகுக்கும் மையத்தின் இயக்குநர் ஷரோன் ஸ்குவாசோனி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment