நேற்று முன்தினம் பாகிஸ்தானிய பாராளுமன்ற அமர்வு நடைபெற்ற போது என்றுமே இல்லாதவாறு சுமார் 14 மணித்தியாலங்கள் அமெரிக்காவின் அபோதாபாத் தாக்குதல் பற்றியும் வசிரிஸ்தான் மீதான தாக்குதல்கள் பற்றியும் வாதப்பிரதிவாதம் நடைபெற்றது.
இதில் விசேட அம்சம் பாகிஸ்தானிய இராணுவ தளபதியும் உயர்மட்ட ஜெனரல்களும் மேற்படி அமர்வை தொடர்ந்து அவதானித்ததாகும். கடந்த சில வருடங்களாக அரசு இயந்திரம் ஒரு புரமும் இராணுவ இயந்திரம் மறு புரமும் தத்தமது போக்கில் செயற்பட்டு வந்தன.
இம்முறை வழமைகளிற்கு மாறாக துருக்கிய இராணுவம் எவ்வாறு துருக்கிய பாராளுமன்ற அமர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறதோ அதே போன்ற ஒரு நிலை பாகிஸ்தானில் உருவாகியுள்ளது.
ன
இதில் மைய விடயம் பாகிஸ்தானிய இராணுவமாகும். அது எவ்வாறான போக்கை கடைபிடிக்கப் போகின்றது என்பதே இங்கு முக்கிய விடயமாகும். பாகிஸ்தானிய அரசியலில் தலையீடு செய்து அமெரிக்க அடாவடித்தனங்களிற்கு சில தீர்வுகளை முன்வைக்கும் நிலையை எடுக்கப் போகிறதா அல்லது ஒரு இராணுவ புரட்சியை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானை ஒரு தீர்க்மான நிலைக்கு இட்டுச் செல்லப்போகிறதா இல்லை அமெரிக்காவால் அண்மையில் தயார்படுத்தப்பட்டுள்ள பர்வீஸ் முசாரப்பின் ஆலேசனையின் பேரில் இயங்கப்போகிறதா என்பது கேள்விக்குரிய விடயமாகும்.
பாகிஸ்தானின் இறைமையை காப்பதற்காக எந்த விலையையும் கொடுக்க பாகிஸ்தானிய இராணுவம் தயாராகிறதா இல்லை பாகிஸ்தானிய இராணுவத்திற்கும் C.I.A. யிடம் ஒரு விலை உள்ளதா என்பதை இனி வரும் காலங்கள் விடை பகரும்.
No comments:
Post a Comment