பாகிஸ்தானின் கராச்சி நகரில் நேற்று அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் சவுதி அரேபிய தூதரகத்தின் வெளிப்புறத்தில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அத்தூதரக அதிகாரி ஒருவர் பலியானார்.
இச்சம்பவத்துக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காக பாகிஸ்தான், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்திருந்தனர். அதன்படி முதலில் பாகிஸ்தான் ராணுவ அகாடமியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் பலியாயினர். தொடர்ந்து கராச்சியில் உள்ள சவுதி அரேபிய தூதரக அலுவலகத்தின் மீது வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் யாரும் பலியாகவில்லை.

இந்நிலையில் நேற்று சவுதி அரேபிய தூதரக அதிகாரி ஒருவர் தனது காரில் அலுவலகத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய இன்னும் 200 அடிகளே இருந்த நிலையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் அவரது காரை நோக்கிச் சுட்டனர். அதில் ஒரு குண்டு அதிகாரியின் தலையில் பாய்ந்து அவரது உயிரைக் குடித்தது. "இச்சம்பவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. எனினும் வரவேற்கிறோம்" என்று முதலில் அறிக்கை விட்ட தலிபான்கள் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில்," பாகிஸ்தான் மற்றும் சவுதி இரண்டும் அமெரிக்காவின் அடிமைகள். இத்தாக்குதல் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளனர். இத்தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கான சவுதி தூதர் அப்துல் அஜிஸ் அல் காதிர் மற்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானும் சவுதியும் நீண்ட நாள் நண்பர்கள். சவுதி அமெரிக்காவின் நட்பு நாடு.
ஒசாமா கொல்லப்பட்ட பின் சவுதியிடம் இருந்து அனைத்து விதமான ஆதரவுகளையும் பாகிஸ்தான் கோரியுள்ளது. சவுதியும் அதற்குச் சம்மதித்துள்ளது. பாகிஸ்தான் உடனான சவுதியின் கொள்கை இப்போது சவுதியை திருப்பி அடித்திருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தானில் உள்ள சில மதவாத அமைப்புகளுக்கு சவுதி நிதியுதவி அளித்து வந்தது. அதிலிருந்து பயங்கரவாதிகள் உருவாயினர். இப்போது அது சவுதியையே திருப்பித் தாக்குகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment